இலங்கை: கொரனா செய்திகள்

இன்றும் அதிகரித்தது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 482 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 543,867 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசியில் சமத்துவம் தேவை

“கொரோனாத்  தடுப்பூசியில் சமத்துவம் தேவை “ என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரர்ஸ் (Antonio Guterres )தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் சமூக நீதியிற்கான திரைப்படம்

(சாகரன்)

ஜெய் பீம் என்ற மராத்திய வழி போராட்ட வாழ்த்துச் சொல்லாடல் தலைப்புடன் படம் தொடங்குகின்றது காட்சி ஊடகங்ள் ஒலி, ஒளி என இருவகை இணைப்பாக செய்திகளை… புதினங்களை… பொழுது போக்குகளை…. வெளிப்படுத்துவதினால் ஒலி ஊடங்கங்களை விட வலுவானதானக இருக்கின்றன.

தமிழக அரசு இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ₹225.86 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியா : தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி வகுப்புவாதத்தை முன்னெடுக்கின்றது

(Athiyan Silva)

சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்களை, தமது பிற்போக்கு வகுப்புவாதப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவரும் தென் இந்தியாவிலுள்ள தமிழ்க்கட்சிகளில் தீவிரவாத நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டமும் அவர்களின் சிறை முகாம்களும்

(சாகரன்)

புலிகளின் துணுக்காய் வதைமுகாம்.

ஈழவிடுதலைப் போராட்டம் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மீது பேரினவாதம் படிப்படியாக இறுக்கிக் கொண்டுவந்த ஒடுக்கு முறையிற்கு எதிராக எழுந்த போராட்டம்தான். ஈழத் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்குரிய எல்லாவித நியாதாதிக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தனர்.

தமிழக முதல்வருக்கு வாழ்த்தும் நன்றியும்

ஈழத் தமிழர் மறு வாழ்வு முகாமில் தமிழக முதல்வர் ஸ்ராலின் அவர்கள்.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நலத் திட்டங்கள் முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.தமிழக மக்களுக்கு சமதையான பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்ட சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு சிறப்பு பெறுகிறது.

1.5 டிகிரி

சிதம்பரம் இரவிச்சந்திரன்

“கிளாஸ்கோ மாநாட்டில் உலகத் தலை வர்கள் உருப்படியாக எதுவும் செய்ய வில்லை என்றால் புவி வெப்பமடைதல் கற்பனைக்கு எட்டாத அளவில் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்” என்ற நிபுணர்களின் எச்சரிக்கையுடன் துவங்கியிருக்கிறது ஐ.நா.காலநிலை மாற்ற உச்சி மாநாடு.

யாழின் பல பகுதிகளுக்கு வட மாகாண ஆளுநர் விஜயம்

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்டத்தில் சில இடங்களுக்கு, இன்று (02),  நேரில் சென்று பார்வையிட்டார்.  பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா  பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து இதன்போது கேட்டறிந்துகொண்டார். இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ். பிரதேச செயலாளர்  மற்றும் அரச உத்தியோகத்தர்களை நேரில் அழைத்து, நிலைமை குறித்தும் கலந்துரையாடினார். 

இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்’ எனப் பேசியுள்ளார்.