அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு யதார்த்தம் புரிகிறது! ஆனால் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள்

இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த  சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

புலிகளுக்கு நிதி திரட்டிய பெண் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஓர் அகப்பையில் அரசாங்கம் பகிரவேண்டும்

ஒவ்வொரு தேர்தல்களிலும் எக்கட்சிக்கு, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதில் வாக்காளர்கள் ​மிகக் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான், ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றது. அத்துடன், தமது பிரதேசங்களைச் சேர்ந்த பிரநிதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கைதேர்ந்தவர்களாக வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதுதான், ஜனநாயக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

லாவண்யா தற்கொலைக்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (17),  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை!பெண்களே செய்த கொடூரம்.

தலைநகர் டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போதிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தே வருகிறது.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 1)

(சிவராசா கருணாகரன்)

வெளிச்சம் பத்திரிகை வன்னிப்பெருநிலப்பரப்பில் வெளியாகிவந்த புலிகளின் பரப்புரைப் பத்திரிகை. அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்பட்டு வந்தவர் சிவராசா கருணாகரன். ஈரோஸ் எனப்படும் ஈழப் புரட்சிகர அமைப்பின் உறுப்பினரான கருணாகரன், புலிகள் சகல இயக்கங்களையும் தடைசெய்து ஈரோஸை தம்முடன் இணைத்துக்கொண்டபோது புலிகளை ஏற்றுக்கொண்டு பாலகுமாரன் வழி சென்றவர் என்பதுடன் புலிகளின் மனிதவிரோத , பாசிஸ, எதேச்சதிகார செயற்பாடுகளை வெளிச்சம் பத்திரிகை ஊடாக நியாப்படுத்தி வந்ததுடன் புலிகளை மக்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தவர். 

இளையோரின் ஏற்றத்திற்கான எமது முயற்சியை கொச்சைப்படுத்தாதீர்கள்!

(கம்பவாரிதி இ. ஜெயராஜ்)

உயர் ஆளுமை பெற்று நம் இளையோர் உயர்வு பெற வேண்டும் எனும் நோக்கோடு அண்மையில் கிளிநொச்சியில் நாம் ஆரம்பித்த புதிய முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டினை இணையவெளியில் பார்க்க முடிந்தது.

பொது வேட்பாளருக்கான ஓட்டம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அச்சட்டம் திருத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு அடுத்த மாதம்?

புதிய அரசியலமைப்புக்கான வரைபு அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஸ் டி சில்வா தலைமையிலான குழு, அதன் பணிகளை இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  ஜனாதிபதியிடம் இந்த வரைபு கையளிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அதனை ஆராய்வார் எனவும் அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.