லாவண்யா தற்கொலைக்கு காரணம் என்ன?

பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

“முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். 

விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார். 

ஜனவரி 10-ம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். 

மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகாரகள் எதுவும் பெறப்படவில்லை. 

முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்விஅலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.