இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

(Mr.Kandasamy)


கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தொடர்ந்தும் தீவிரமாக எழுதிவரும் முக்கியமான எழுத்தாளராக அவதானித்து வருகின்றேன். எட்டு நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுதிகளையும். மருத்துவத் துறை சார்ந்த இரண்டு மருத்துவ நூல்களையும், முருகன் வழிபாடு பற்றிய மானிடவியல் ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர்.

வெறும் பேச்சுகள் பூவுலகைக் காப்பாற்றுமா?

கிளாஸ்கோவில் கடந்த வாரம் நிறைவடைந்த பருவநிலை மாற்ற மாநாட்டை சுருக்கமாக எப்படி வர்ணிப்பீர்கள் என்று கேட்டபோது, “பிளா பிளா பிளா (அர்த்தமற்ற வெறும் பேச்சு) என்றுதான் கூற வேண்டும்” என்று பிரபல பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் கூறியுள்ளார்.

சின்மயா வித்யாலயா – RSS பின்புலம்.!

சங்கரன் சின்மயா வித்யாலயா என்று அழைக்கப் படும் இந்தப் பள்ளி ஆனது மும்பை மத்திய சின்மயா மிஷன் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது. இது ஒரு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட பள்ளியாகும். இந்த சின்மயா மிஷன் அறக்கட்டளை இந்தியா, வெளிநாடு என 300க்கும் மேற்பட்ட மையங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு உலகம் முழுவதும் உள்ள கிளைகளை நிர்வாகம் செய்வதற்கு என்று ஆறு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன.

புனித்

புனித் ராஜ்குமாரை ‘கன்னடத்தின் விஜய் ‘ எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. ‘பவர் ஸ்டார்’ என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே ‘அப்பு’ என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.

பழைய குருடி கதவை திறவடி

(ரவிச்சந்திரன் பிரஷாஹினி)

அதிகரித்து வருகின்ற கொரோனா காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் குறித்த செய்திகளே பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்தில் இலங்கையானது பெரும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் நாட்டில் தொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதார சிக்கல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

இலங்கைக்கு பின்லாந்தின் கல்விப் பாரம்பரியம்

‘மின் பஸ்ஸே கொய் மோடெயெக்டத் லங்காவே பேரன்ன பே. ஹெமோம யம்கிசி அத்யாபன பெத்தென் யொமுவென்னம வெனவா’ இனிமேல் இலங்கையில் எந்தவோர் மடையனும்கூட தப்ப முடியாது. அனைவரும் ஏதோவொரு கல்வித் துறையில் ஈடுபட்டேயாகவேண்டும்.

வேளாண் செய்முறைகளில் செயற்கைப் பசளை இடுதலின் அவசியமும் உயிர் உரம்களும் (Bio fertilzer.)

பொட்டாசியம் குளோரைட்டு என்னும் செயற்கை உரம் வந்துள்ளதாக சில தகவல்கள் கசிகின்றன .மீண்டும் விவாசயவிஞ்ஞான அனுபவமற்ற பதிவுகள் முகநூலை நிறைக்கின்றன .சில தெளிதலுக்காக எனது பழைய பதிவொன்றை மீண்டும் தருகின்றேன் – வடகோவை வரதராஜன்

காந்திமதி

அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை… காந்திமதி.சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு காந்திமதிக்கு.

புலமைப்பித்தன்!

கதையின் நாயகியான அவள் அத்துணை அழகு.
அழகின் குவியல்.
ஆயிரம் நிலவுகளின் பொலிவு ஒருசேர இருந்த அவளை
‘ஆயிரம் நிலவே வா!’ என்று ஒருமையில் அழைத்தார்
புலவர் புலமைப்பித்தன்.
அந்த வரியே ஒரு கவிதை.
அதுவே ஓர் இலக்கியம்.

கறுப்பு மணலின் கறுப்பாடுகள்

(நடராஜன் ஹரன்)

அண்மைக்காலமாக கிழக்கில், இல்மனைட் எனும் கறுப்பு மணல் அகழ்வது தொடர்ப்பான சர்ச்சைகளும் இதற்கு எதிரான மக்கள் எழுச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இன்று இலங்கையில் மட்டுமன்றி, உலகில் அனைத்து பகுதிகளிலும் இயற்கையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.