கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்

 

சிவன் பவுன்டேசன் மோகன் என்ற கணேஸ் வேலாயுதம் உடன் சமூக வேலை ஆர்வலர்களுடனான சந்திப்பொன்று இன்று ரொறன்ரோ கனடாவில் நடைபெற்றது. கனடா செல்வசன்னதி ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரெலோ சர்வதேசம் உறுப்பினர்கள், காட்லி கல்லூரி பழைய மாணவர் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யின் உறுப்பினர் தோழர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள், புனர்வாழ்வு, வேலைவாய்பு. கல்வி ஊக்குவிப்பு என்பவற்றில் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் சிவன் பவுன்டேசன் கனடாவின் எமது உறவுகளின் உதவியுடன் தமது சேவையை தொடர்வதற்கான ஆலோசனையும் செயற்திட்டங்கள் பற்றியும் இவ் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மத்திய அரசு, மாகாண சபைகள்(குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகள்) தூரநோக்கு பார்வையுடனான செயற் திட்டங்களும், செயற்பாடுகளும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் அற்று செயற்படும் தற்போதைய நிலமையில் இது போன்ற மக்களுக்கான சேவை முன் நகர்த்திச் செல்வதில், செயற்படுத்துவதில் உள்ள தடங்கலகள் பற்றி தோழர் ஜேம்ஸ் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் சற்று நெகிழ்வான அணுகுமுறைகளை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இது போன்ற செயற்பாடுகளில் காட்டி வருவதாக மோகன் கூறிய கருத்து ஏற்புடையதாக இருப்பினும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் இது போன்ற செயற்பாடுகளுக்கு பெரும் தடங்கல்கள் ஏற்படலாம் எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு அங்கீகரிகப்பட்ட பொது முடிவை இவ்விடயங்களில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நிலமைகள் ஏற்படாத வரைக்கும் இவ் உதவித் திட்டங்கள் தற்காலகமானவையே எனக் கருத்து தெரிவித்தார். ஆனாலும் போரினால் ஏற்பட்ட ரணங்களுக்கு இந்த உதவிகள் தற்காலிக ஒத்தடங்களாக அமையும் என்றும் கருத்து தெரிவித்தார். எனவே சிவன் பவுன்டேசனின் செயற்பாடுகள் தொட வாழ்த்துக்களை தெரிவித்து தமது அமைப்பால் ஆன உதவிகளை செய்வதாகவும் கருத்து தெரிவித்தார்.