தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்

எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கையில் 2002, 2011 காலப்பகுதிகளில் யுத்தக்குற்றங்களும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருப்பதாக கூறி இதற்கு ஒர் சிறப்பு கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். போரினால் பாதிப்படைந்து நீதிகோரி நிற்கும் எம்மக்களது ஆதங்கத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கை அமைந்துள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கூடிய விரைவில் எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எமது குடும்பம் நடுத்தெருக்கு வரும் நிலையில்’ JVP தலைவர் விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி

ஜே.வி.பி.யின் தலைவரான ரோஹன விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடற்படை முகாம் ஒன்றிலுள்ள வீட்டில் தங்கியிருந்தனர். வெலிசர கடற்படை முகாமில் இவ்வாறு தங்கியிருந்த விஜேவீரவின் குடும்ப உறுப்பினர்களை அந்த வீட்டைவிட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக பெரும் சிரமங்களை தாமும் தமது பிள்ளைகள் அறுவரும் எதிர்நோக்கி வருவதாக விஜவீரவின் மனைவி சித்ராங்கனி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கடற்படைத் தளபதி கடற்படை முகாமில் அமைந்துள்ள வீடுகளிலிருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் தமக்கு வெளிநாடு ஒன்றில் தங்குதவற்கு அனுமதியளிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்

பிரிட்டனில் லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் தெரிவான நாளில் இருந்து, பிரிட்டிஷ் ஊடகங்கள் அவருக்கெதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஜெரேமி கொர்பைன் ஒரு “தீவிர இடதுசாரி” என்பது தான் அந்தப் பிரச்சாரங்களின் சாராம்சம். அதாவது, ஒருவரை இடதுசாரி முத்திரை குத்தி விட்டால் போதும். மக்கள் அவரை தேர்தலில் நிராகரித்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலைமையோ வேறு விதமாக உள்ளது.

(“லேபர் கட்சித் தலைவராக, ஜெரேமி கொர்பைன் ஐ வசைபாடும் ஊடகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மனித உரிமை அறிக்கையை ஆராய்கிறது ஶ்ரீ.ல.சு.க

கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீ.ல.சு.கவின் செயலாளரும் கைத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வாரம் அளவில் இவ்விடயம் தொடர்பிலான அறிக்கையை அக்குழு வெளியிடும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.

உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்

உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்ஸுக்கு எதிரான அமெரிக்காவின் நான்கைந்து கிளர்ச்சியாளர்களே மிச்சம்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக போராட அமெரிக்கா பயி ற்சி அளித்த கிளர்ச்சியாளர்களில் நான்கு அல்லது ஐந்து பேரே களத்தில் போராடி வருவதாகவும் அந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.எஸ்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் யுத்த மூலோபாயத்தின் கீழ் சுமார் 5,000 கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற் றும் பயிற்சி வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க கொங்கிரஸ் அவையில் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்த திட்டதின் கீழ் பயிற்சிபெற்ற 54 பேர் கொண்ட குழுவின் பெரு ம்பாலான கிளர்ச்சியாளர்கள் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா குழுவி டம் சிக்கி இருப்பதாக அமெரிக்க இராணுவ ஜெனரல் லொயிட் ஒஸ்டின் அமெ ரிக்க செனட் அவையில் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா பயிற்சியளித்த வீரர்களில் எஞ்சியிருக்கும் எண் ணிக்கை நகைச்சுவையானது என்று குடியரசு கட்சி செனட் உறுப்பினர் கெல்லி அயோட்டே குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டதை நாம் கண்டறிந்திருக்கிறோம். அது அப்படி இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுதான் உண்மை” என்று மற்றொரு குடி யரசு கட்சி செனட்டர் ஜெப் செசன் குறிப்பிட்டார்.

எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை – வட கொரிய தூதுவர்

“எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை.” இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
தூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:

– என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

– ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

– வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.(Kalaiyarasan Tha)

ஐ.நா. அறிக்கையை முழுமையாக ஏற்கிறோம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென சுமந்திரன் கூறினார். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில்தான் வசிக்கிறார்கள் என்பதால் இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்தார்.

‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ – ஐநா

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

(“‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ – ஐநா” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை – ஐ.நா

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் – சில தருணங்களில் மிக மோசமானதாக – மேற்கொள்ளப்பட்டன என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா (16 செப்டெம்பர் 2015) இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை இலங்கையில் 2002 இல் இருந்து 2011ஆம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன. இவ்வறிக்கை, நீதியை அடைந்துகொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமென்று பரிந்துரை செய்துள்ளது.

(“இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமானவை – ஐ.நா” தொடர்ந்து வாசிக்க…)