இலங்கை நிலைமை ஏற்படலாம்: மோடியிடம் எடுத்துரைப்பு

மாநில அரசுகளின் இலவச திட்டங்களால், இலங்கை போன்ற நிலை ஏற்படலாம் என்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. (நன்றி: தினத்தந்தி)

மலையகத்திலும் பாரிய போராட்டம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 300ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

’இராஜினாமா செய்ய அவசியம் இல்லை’

இலங்கையிலுள்ள 69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (04)  தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரியும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (04) காலை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்திலிருந்து விலகுகிறது சு.க

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, இன்று (04) தெரிவித்தார்.

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு

அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை  கொடுத்துள்ளனர்.

கூண்டோடு ராஜினாமா செய்த இலங்கை அமைச்சரவை: அதிபர், பிரதமர் பிடிவாதம்

இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர்.

‘பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும்’

(எம்.எஸ்.எம். ஹனீபா)

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ், கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இலங்கையின் உயர் கல்வியின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரக்கட்சி எடுத்துள்ள தீர்மானம்

அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இல்லத்தில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார்

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.