மலையகத்திலும் பாரிய போராட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைப் பெற்றுத்தர கோரி கண்டி நகர் எங்கும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்கங்கள் பல இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இவ்வாறு கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

கண்டி சட்டத்தரணிகள் சங்கம், சிங்கள வர்த்தக முன்னணி, முஸ்லிம் வர்த்தக சங்கம், தமிழ் வர்த்தக சங்கம், மத்திய மாகாண வணிக மற்றும் தொழிற்சாலை சபை உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் இன்றைய தினம் கருப்பு கொடிகளுடன் ஜோர்ஜ். ஈ.டீ.சில்வா மைதானத்தில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல்,மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும்  நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து இன்று (4) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை வெளியேறுமாறு ஒப்பாரி வைத்து பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது,  பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன்,  பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவை, கொட்டியாகலை, கிலானி, பொகவானை, குயினா, கெம்பியன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.