இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 718 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 561,777 ஆக அதிகரித்துள்ளது.

6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது.

மாகாண சபைகளை ஒழித்துக் கட்டுங்கள் – ஏ. எல். எம். அதாஉல்லா

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட மாகாணசபைகள், நாட்டுக்கு பெரும் சுமையாக இருப்பதாக தெரிவித்த அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாஉல்லா, புதிய அரசமைப்பின் ஊடாக மாகாணசபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.   

பெருந்தோட்ட காணிகளின் உரிமை தொழிலாளர்களுக்கே

பெருந்தோட்ட காணிகளின் உரிமை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கே இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் தராசு எமக்கு வேண்டாம்… செப்பல்டன் தோட்ட மக்கள் சீற்றம்

பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்துகளை நிறை பார்ப்பதற்காக தோட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் தராசில், கொழுந்தின் நிறை குறைவாக காட்டப்படுவதாகத் தெரிவித்து, பொகவந்தலாவை- செப்பல்டன் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (25) தாம் பறித்த கொழுந்தை நிறை பார்ப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் வழங்க மறுத்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கணிசமாக உயர்ந்தன கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 19 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 07 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் எம்.பிக்கள் நினைவு கூர்ந்தனர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும் (25) இன்றையதினம் ஓரஞ் நிறத்திலான சாரிகளை அ​ணிந்து, பாராளுமன்ற பெண் எம்.பிகள், நினைவுகூர்ந்தனர்.

கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் : மூவ​ர் கைது

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் அந்தப் படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவரென மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனர்த்தம் நேற்று(23) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பஸ் தீப்பற்றி எரிந்ததில் 45 பேர் உயிரிழப்பு

பல்கேரியாவில், பயணிகள் பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்ததில்  45 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,