பெருந்தோட்ட காணிகளின் உரிமை தொழிலாளர்களுக்கே

லுணுகல சோலன்ஸ் தோட்ட காணி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே,
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,லுணுகல- சோலன்ஸ் தோட்டத்தில் தன்னுடைய வேண்டுகோளின் கீழ்,  தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த காணியை வெளியாட்களுக்கு சட்டவிரோதமாக பிரித்து கொடுப்பதற்கு, லுணுகல பிரதேசசபை தலைவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை  தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது என்றார்.

விசேடமாக பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட காணிகளை வெளியாட்களுக்கு
சட்டவிரோதமான முறையில் பிரித்து கொடுப்பதற்கு  தீய சக்திகளினால், அரசியல்
அங்கீகாரத்துடன் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

எனவே, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் மலையகப் பெருந்தோட்ட காணிகளை சட்டவிரோதமான முறையில் வெளியாட்கள் அபகரித்துக் கொள்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன்.

இத்தகைய காணி அபகரிப்பு செயற்பாடுகளினால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்,
தங்களுடைய தொழிலை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான
பிரச்சினைகளுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம்கொடுக்க நேரிட்டால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.