அனைவருக்கும் கதவுகள் திறந்திருக்கும் – ஞானசார தேரர்

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

பெண்களுக்கு குறி!

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ள நிலையில், பெண்களுக்கு பஸ்களில் இலவச பயண சலுகை, இலவச ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர், 3 காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வாக்குறுதி அளித்துள்ளார்.

யாழ். – கொழும்பு ரயில் சேவை புதன் மாலை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவை, புதன்கிழமை (03) மாலை ஆரம்பமாக உள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

நாட்டுக்குள் நுழைந்தது சீனக் கப்பல்?

இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

திடீரென உயர்ந்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 338 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடையில் 550 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 540,919 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா மரணங்கள், தொற்றாளர் அதிகரிப்பு. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 12 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் மூன்றாவது நகரத்தையும் முடக்கியது கொரோனா

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவி வருகிற நிலையில், சீனாவில் மாத்திரம் ஒரே வாரத்தில் மூன்றாவது நகரமும் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. 

இலங்கை: கொரனா செய்திகள்

பிளவ வருட கொத்தணி அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேலும் சில தளர்வுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையிலேயே கீழ்க் குறிப்பிடப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

இலங்கை: கொரனா செய்திகள்

சடுதியாக அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கை மேலும் 560ஆல் அதிகரித்துள்ளது. இம்மாதம் 15ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 537,761 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி

ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட பணிக்குழுவின் தலைவராக கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். “இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்” உள்ளிட்ட பெறுப்புகள் குறித்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.