மலையகச் சிறுமிக்காக யாழில் திரண்ட மக்கள்

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ். நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வேலைக்குச் செல்லும் சிறுவர்கள்; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வீட்டு வேலைக்குச் செல்லும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இணையத்தைக் கலக்கும் திருவள்ளுவர் ஓவியம்

தமிழக முதலமைச்சராகவுள்ள மு.க.ஸ்டாலின் ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ‘என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கணேஷ் என்ற ஓவியர், தமிழ் பிராமி, வட்டெழுத்துகள், தற்போதைய நவீனப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் என 741 எழுத்துக்களைப் பயன்படுத்தி வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் அப்பதிவில் மு.க.ஸ்டாலினையும் டக் (Tag) செய்துள்ளார்.

இந்நிலையில் அவ் ஓவியத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ”அன்பின் வழியது உயிர்நிலை” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால், தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஓவியமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் ​கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு, கிடுகிடுவெ அதிகரித்து செல்கிறது என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது.

ரிஷாட்டின் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணும் வன்புணர்வு

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார்.

பெண்களைக் காக்க வருகிறது ‘பிங்க்‘

கேரளாவில் கொரோனா ஊரடங்குக் காலம் தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

2 மில்லியன்  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

’இந்தியாவுக்கு பாதகமாக செயற்படமாட்டேன்’ – டக்ளஸ் தேவானந்தா

நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயற்படமாட்டேனென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (22) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

’தேசிய ரீதியான போராட்டத்துக்கு வடக்கின் ஆதரவும் வேண்டும்’

நாடு பூராகவும் அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவு வங்குவதாகத் தெரிவித்த இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன், அதேபோல் வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் குறித்த போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில், உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி, இன்று (22) கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரையோகத்தைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.