வேலைநேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தத் தடை

தமிழகத்தில்  அரச ஊழியர்கள் வேலைநேரத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த விரைவில்  தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் இணைந்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

உக்ரேன் ஜனாதிபதியின் அறிவிப்பால் உலக நாடுகள் சோகம்

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 20 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர்  செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  தெரிவித்துள்ளார்.  

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மற்றொரு திருகுதாளம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடு எங்கே செல்கிறது என்பது, ஒருவருக்கும் தெரியாது. மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள், எத்தனை ஆண்டுகளில் தீரும் என்றும் கூற முடியாத நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகள் தீராதது மட்டுமல்ல; அவை நாளாந்தம் வரலாற்றில் ஒருபோதும் காணாத வேகத்தில் அதிகரித்தும் செல்கின்றன.

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 03

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

இலங்கை மீன்பிடிக் கைத்தொழிலும், வளங்களும்:

இந்தியாவிற்கு தென்கிழக்கில் இந்திய உப கண்டத்தில் அமைந்திருக்கும் இலங்கையானது பல கரையோர அம்சங்களைக் கொண்ட 1770 கிலோமீற்றர் கரையோரத்தையும், 200 கடல் மைல் பிரத்தியேக பொருளாதார வலயத்தையும் (Economic Exclusive Zones), 517000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட ஆள்புல உரிமையுள்ள (Soveriegn rights) சமுத்திர பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இலங்கையின் தரைப் பரப்பளவைவிட 8 மடங்கு கடல் பரப்பு அதிகமாகும். இவைகளில் கண்டமேடையும், ஆழ்கடலும் அடங்குகின்றன. இங்கு பதினொரு சதவீதமாக காணப்படும் கண்டமேடைகளில்; 250000 தொன் அடித்தள, இடைத்தள, மேற்தளவாழி மீன்களும், ஆழ்கடல் மீனினங்களும் (இவைகள் இடம்பெயரக்கூடியன) பிடிபடுகின்றன. இருந்தும் மீன்பிடியானது சராசரியாக 25 கிலோமீற்றருக்குள்ளும், ஆகக்கூடியது 40 கிலோமீற்றருக்குள்ளும், மொத்தமாக 25000 தொடக்கம் 30000 சதுர கிலோமீற்றருக்குள்ளேயே நடைபெறுகின்றது.

ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு

கர்நாடகாவிலுள்ள உடுப்பி அரசு மகளிர் பல்கலைக்கழகத்தில், அண்மையில் ஆறு முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப்  அணிந்து வகுப்பிற்கு வருகை தந்ததால் அம்மாணவிகளை அப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது.

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?

ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம்கள் மீதான கறையும் பேராயரின் உரையும்

(மொஹமட் பாதுஷா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது, கட்டம்கட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னால், பெரியதோர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் சதித்திட்டமும் இருக்கலாம் என்று, ஆரம்பத்தில் துளிர்விட்ட சந்தேகம், இப்போது வலுவடைந்து இருக்கின்றது.

தமிழ்- முஸ்லிம் விரிசலுக்கு அரைவேக்காடு அரசியல்வாதிகளே காரணம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“நிச்சயமாக ஒரு தமிழ்ப் பெண்தான் எனது பாட்டியாக இருந்திருப்பார். என்னுடைய தாய், தந்தையின் நாலாவது அல்லது ஐந்தாவது தலைமுறை, தமிழ்க் குலத்துப் பெண்கள்தான்; இதுதான் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வதுதான்.

ஒரே நாளில் சரிந்த ரூபாவின் பெறுமதி: இலங்கையில் என்ன நடக்கிறது?

(என்.கே. அஷோக்பரன்)

ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்று ($1) 1997ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில், 60 ரூபாய்; 2022 மார்ச் 11இல் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ விற்பனைவிலை 260 ரூபாய். 25 வருடங்களில், இலங்கை ரூபாய் கண்டுள்ள பெருவீழ்ச்சி இது.