சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?

உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா,
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்,
ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மேலும் பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.