தம்பி . . தண்டப்பிரசண்டன். . !

(Sabesan Sinn)

தம்பி . . தண்டப்பிரசண்டன். . !

அமெரிக்காவின் ‘’பின்வளவிற்குள்’’ அதாவது கியுபா வில் ஆயுதத்தினை புதைக்க ரஸ்சியாவிற்கு உரியைில்லை. . !

. .ஆனால் . மாஸ்க்கோவின் ‘’முன்வளவில்’’ ஆயுதத்தினை புதைக்க ரஸ்சியா அனுமதிக்க வேண்டுமாம்..?

பிரியங்கா காந்தி : என் சகோதரருக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் : உலக நாடுகள் எச்சரிக்கை

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் அதிகரித்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அங்கு தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை  உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

தாளத்துக்கு ஆடுவதை தவிர்க்க முடியாது

வீட்டில் பெற்றோர் இருக்கும் போது, எவ்வாறான குழப்படிகளைச் செய்தாலும் பரவாயில்லை; பெற்றோர் இல்லாத தருணங்களில் மிகக் கவனமாகவே இருக்கவேண்டுமென்ற முன்னோரின் அறிவுரை, பலருக்கு ஞாபகத்தில் இருக்கும்.

இரு நாள்களாக கிழக்கில் கன மழை

கிழக்கு மாகாணத்தில் கடந்த இரு நாள்களாக கனத்த மழை பெய்து வருகின்றது. இதனால் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் தாழ் நிலங்கள் பல வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், பாலம்போட்டாறு பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தம்பலகாமம் கடவாணை அணைக்கட்டின் மேலாக வெள்ளநீர் வடிந்தோடுகிறது.

நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொதுமக்ககள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமையலறை, வீட்டுத்தளபாடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் ஜின்னா நகர் பகுதி வெள்ளத்தில் மூழ்குவதாகவும் இது விடயமாக அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பல தடவைகள் முறையிட்டும் வடிகான் வசதிகளை செய்துதருமாறு கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதுவரை கவனத்தில் கொள்வதில்லை என ஜின்னா நகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரி 116.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், நவகிரியில் 29.0 மில்லிமீற்றரும் தும்பங்கேணியி 43.0 மில்லிமீற்றரும் பாசிக்குடாவில் 108.5 மில்லிமீற்றரும் உன்னிச்சையில் 39.0 மில்லிமீற்றரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை 19.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

போதைக்கு அடிமையாகும் இள வயதினர்

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறுவர்கள் இள வயதினர் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நிலமை அதிகளவிலேயே காணப்படுகின்றன.

மன்னார் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்றது.

மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

உயிர் வாழத் தகுதியான புதிய கோள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக  லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ள பா.ஜ.க அரசு: பிரியங்கா விமர்சனம்

மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளியேவந்ததை அடுத்து, ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கியுள்ளதாக காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.