அடிவாங்கிய சவப்பெட்டி

சாக முன்னமே ரயர் போட்டு எரித்த குழு ஒன்றுக்கு தலமை தாங்கியவர்.
கஜேந்திரன் யார்?

40,000சவப்பெட்டிகளை தயார் படுத்துங்கள் பிரேதம் அனுப்புவதற்கென்று முழங்கிய அகிம்சாவாதி .

செத்தவன் பல போராளிகளை குற்றுயிராய் துடிக்கத் துடிக்க கொன்றவன். படத்தை தூக்கிக் கொண்டு போறவன் அதைவிட மோசமானவன்.

இன்று நிர்க்கதியாக இருக்கும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் எந்தப் பிரச்சனை இந்தப் பிரேத ஊர்வலத்தால் நிறைவுபெறும்?

இதனால் தமிழர்கள் தாக்கப்பட்டால் கஜேந்திரன் என்ன செய்வார்?
ஏன் இவரோடு பெருந்திரளான மக்கள் செல்லவில்லை?

அடிக்க வந்த காடையர்களோடு ஏன் சிங்கள மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமி வரவில்லை?

அடிக்க வந்தவனின் அரசியலும்
அடிவாங்கியவனின் அரசியலும் ஒரு புள்ளியில் சந்திக்கிறதல்லவா?
இவங்கள் தங்கட வாக்குக்காக காலம் காலமாய் அப்பாவி மக்களுக்கு வாய்க்கரிசி போடுகிற அரசியலை குழி தோண்டிப் புதைக்க யார் வருவர்?