“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபைக்கு வந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சற்றுமுன்னர் சபைக்கு வருகைதந்தார். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி தற்போது சபை அமர்வுகளை புறக்கணிக்கிறது, அந்த நேரத்தில் ஜனாதிபதியின் பிரசன்னம் சிறப்பு வாய்ந்தது

4 கோடி ரூபாய் ஐஸூடன் காரை விட்டோடிய சாரதி

ஓட்டுநர் கைவிட்டு தப்பிச் சென்ற சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) இரவே, காருடன் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்து.

போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி குடிபோதையில், போக்குவரத்து விதிகளை மீறி பேருந்தை செலுத்திய  தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிண்ணியா நகர சபை தவிசாளராக எம்.எம்.மஹ்தி

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவு நகர சபையின் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதே சபையின்  தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப -தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

’’ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார்’’: இஸ்ரேல்

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்ய சட்டமூலம்

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை மட்டுப்படுத்த 02 வரைவு சட்டமூலங்களை வகுக்க சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

யாழில்.போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

2024 அரையாண்டு சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையில் 2.7 மில்லியன் பேர் முதியோர் சமூகத்தவராவர். 2052 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் 60 வயதைக் கடந்தவர்களின் சனத்தொகை 24.8மூ சதவீதம் வரை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அலுவலகம் ஊகித்துள்ளது.