யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்
Month: November 2024
லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்?
லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் குறைந்தது
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று காற்றின் தர சுட்டெண் 92 – 120 வரை உள்ளதாக என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றின் தர அறிக்கையின்படி, பல நகர்ப்புறங்களில் காற்று சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும் அவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
பாராளுமன்ற குழுக்கள் பலவற்றை இரத்து செய்ய தீர்மானம்
கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இந்த குழுக்களை நியமித்ததால் பெருமளவு பணம் விரயமாவதை அரசு கண்டறிந்ததை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எரிபொருள் விலைகளில் திடீர் மாற்றம்
யாழ் தமிழ் தேசியவாதக் கோட்டைக்குள் பலமாக அடித்த “அநுர அலை”
(டி.பி.எஸ். ஜெயராஜ்)
தேசிய மக்கள் சக்தி 2024 நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுனவை (ஜே.வி.பி.) பிரதான அங்கத்துவக் கட்சியாகக்கொண்டு 21 அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உளாளடக்கிய ஒரு கூட்டமைப்பே தேசிய மக்கள் சக்தியாகும்.
சமாதானத்திற்கான போரரசியல் – 6
இல்லங்களுக்காக 35 எம்.பிக்கள் விண்ணப்பம்
வரி செலுத்துனர்களுக்கு விசேட அறிவித்தல்
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் நாளை வழமையான வேலை நாளாக திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமனம்
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. அம்பாறை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உதவி வழங்குவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, வட பிராந்தியத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை மீண்டும் கொண்டு வருவதற்கு, பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.