தமிழ்நாடு அரசுக்கு ஓர் ஆலோசனை:

மாதத்திற்கு.. டீசல் விலை மாதம் 10 லட்சம் தோரயமாக.
ஆகமொத்தம் மாதம் 26 லட்சம்…

இதை வைத்து 10 நாட்களில் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை சுத்தம் செய்து விடலாம்….

32 மாவட்டத்தில் ஒரு வருடத்தில் அனைத்தையுமே சுத்தம் செய்து விடலாம்.

ஆக வருட செலவு 3.5 கோடி.
மெசின்களின் செலவுடன் சேர்த்து 16 கோடி.

இதே கணக்கின் படி ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களையும் தூர்வார 16 கோடிதான் செலவு.

ஆக மொத்தமாக ஒரு வருடத்திற்கு 50 கோடி ஒதுக்கி, அதை சரியாக கண்காணித்து… இந்த வேலையை செய்தால் அடுத்த வருடத்திற்கான நீரைத் தேக்கிவைக்கலாம். விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம்.!

இப்படி செய்தாலே மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம்.

இதை விடுத்து அரசியல்வாதிகள் ஏன் ஒரு தேர்தலுக்கு இவ்வளவு கோடி செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வளவு இலவசம் கொடுக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

எதற்காக முந்நூறு கோடியில் சினிமா எடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.
இதை ஏன் எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறதும் புரியவில்லை.

நம்மில் கூட ஓரிருவர் தவிர பேசுவதுமில்லை. இதற்கான காரியங்களில் முயல்வதும் இல்லை.
தேவைகளை பற்றிய தெளிவுகள் தெரிந்து பேச ஆரம்பிப்போம்.

அடுத்தவரை எல்லாம் குறைகூறுவதை நிறுத்திவிட்டு நாம் பேசுவோம்.
அரசியலும் சினிமாவும் பேசுவது போலவாவது அத்தியாவசியம் குறித்தும் பேசுவோம்.

நமக்கு நம்மூரிலேயே வாழத் தெரியாவிட்டால்…
அசலூரில் போய் அரசாளவா போகிறோம்;
அடிமை வேலைதானே செய்ய போகிறோம்!

அருமையான இந்த செய்தியை அவரவர் நட்பு பல குழுவிற்கு பகிர்ந்து பலரையும் சென்றடைய செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்…!!!!

(பாவல் சங்கர்)