அரவிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்

(மாசி 2022ல் எதிரொலி எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது)

1. கேள்வி:- தமிழரின் அரசியலில் 13 பற்றிய பேச்சுக்கள் இப்போது தீவிரமாகியுள்ளன. இதனுடைய இன்றைய நிலை மற்றும் எதிர்காலச் சாத்தியங்கள் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?