அல்பிரட் துரையப்பா வை சுட்டுக்கொன்று 10 சதத்திற்கு விற்கப்பட்ட புலி இலக்கியம் மீண்டும் சந்திக்கு..

தமிழீழ விடுதலைப்போர் எம் சமூகத்திற்கு விட்டுச்சென்றுள்ள பொக்கிஷங்களிலொன்று நீண்டதோர் துரோகிகள் பட்டியலாகும். இப்பட்டியலில் முன் வரிசையில் இருப்பவர் யாழ் மண்ணில் மக்கள் சேவகனாக பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளை சுயேட்சையாக நின்று தோற்கடித்த அல்பிரட் துரைப்பா அவர்களாவார். அவர் ஆலயவழிபாட்டை முடித்து வருகையில் ஒழிந்து நின்று பிரபாகரன் சுட்டுக்கொன்றபோது, யாழ் மண்ணே கண்ணீரால் நனைந்திருந்தது.