அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 4

( யஹியா வாஸித் )

யார்இந்த பௌசி ஹாஜியார் – நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள்.

1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண்
தொறக்க வச்ச காலம்.எல்லாமே அதிசயமாவும், ரொம்ப ஆச்சரியமாவும்
இருந்தது எங்களுக்கு, எத நம்புறது, எத கையுடுவது என்டு தெரியாமல்
இருந்தது,தாயும், பிள்ளையும், வாயும் வயிறுமாக இருந்த தமிழ் நண்பர்கள்,
வாடிக்கையாளர்கள், ஆசிரியர்கள்,போடிமார், தமிழ் சண்டியர்கள்,
எல்லோருமே, எல்லாமுமே, தமிழ் சாமான்ய மக்களை தவிர மற்ற
எல்லோருமே எங்களை ரெண்டாம் கண் கொண்டு பார்த்தார்கள்.