அல்லாஹ் அக்பர் -வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 1

(யஹியா வாஸித்)
நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் 
பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக  ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.
ஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம். ஆம்,ஏப்ரல் 2 1 – 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம்.   
எங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம்.