அஷரப் உம் பிரேமதாஸாவும்

பிரேமதாசாவை கொண்டே புலிகள் பிடித்து வைத்திருந்த தமது கட்சி ஆதரவாளர்களை கூட புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையே நிலவிய தேன்நிலவு காலத்தில் முஸ்லிம் காங்கிரசால் விடுவிக்க முடிந்த நேரம். புலி -பிரேமா தேனிலவு முறிந்த காலகட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் கூட புலிகளின் கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பிரேமதாசாவால் கைவிடப்பட்ட நேரம் , ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் ஆட்கொண்டிருந்த காலத்தில் அஸ்ரப் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து மட்டுமல்ல பின்னர் அவர்களின் கட்சி மாநாட்டு சுவரொட்டிகளிலும் அஸ்ரபின் புகைப்படத்துக்கு பக்கத்தில் பிரேமதாசாவின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு பிரசுரிக்கவும் தீர்மானம் எடுக்குமளவு கட்சி பிரேமதாசாவின் புகழ் பாடுபவர்களாகவும் அவரை குஷிப்படுத்துபர்களாகவும் இருந்துள்ளனர்.

(Bazeer Seyed)