‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்…

‘கேட்கிறவன் கேனயனாய் இருந்தால்….’ என்று தொடங்குகிற பழமொழி ஒன்றுண்டு. சில நாள்களாகவே அது, என் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்திருக்கிறது. இது, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.