ஆண்களுக்காக 7: உங்களுக்கு அந்த அலறல் கேட்கிறதா?

(பாரதி ஆனந்த்)

பெண்ணின் மாண்பைக் குறைக்கும் ஆண்களைப் பற்றியும், அவளை அடிமையாக்கும், ஆதிக்கம் செலுத்தும், அடக்கு முறை செய்யும், பண்டமாகப் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் எழுத வேண்டும் . ஆனால் அவர்களை குற்றவாளியாக மட்டுமே பார்க்கக் கூடாது, எழுதுவது எல்லாம் அறிவுரையாக அமைந்துவிடக்கூடாது. அதேவேளையில் அந்த எழுத்து குற்றமுள்ள நெஞ்சங்களைப் பதறவைக்க வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கப்பட்ட தொடர் இது.