இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கப்போகும் விவசாயம்

(அனுதினன் சுதந்திரநாதன்)
இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் சகலவிதமான தொழில்முறையும் வணிகமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, பாரம்பரியமான விவசாயமுறையும் விதிவிலக்கல்ல. விவசாய செயற்பாடுகள் காலகாலமாக பல்வேறு தொழில்நுட்பங்களின் அறிமுகத்தினால், வேறுபட்டவகையில் விருத்தியடைந்து வந்திருந்தாலும், அதன் வர்த்தக முறையில் தற்காலத்தில்தான் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவிருந்தாலும், விவசாயத்துறையும் ஏனைய துறைகளைப்போல இடைத்தரகர்களிடம் சிக்கித்தவிக்கும் துறையாக மாறிவருகின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.