இந்தியத் தேர்தல் முடிவுகள்: அயலுறவுகளும் ஆபத்துகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்களே ஜனநாயகத்தின் அளவுகோல்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் எவ்வகையான தெரிவுகளையெல்லாம் வழங்குகின்றது என்பதை, நாம் அடிக்கடி காண்கிறோம். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றதொரு முதுமொழியை நாம் துணைக்கழைக்கிறோம். மக்கள் தீர்ப்புகள் எல்லாம், மகேசன் தீர்ப்புகள் தானா என்பதை, எல்லோரையும் விட இலங்கையர்கள் நன்கறிவர். இப்போது, மகேசன் தீர்ப்பை, இந்திய மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதற்கான பலன்களை, வருங்காலத்தில் அவர்கள் அனுபவிப்பர்.