இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினர்

(ஜனகன் முத்துக்குமார்)

அஸாம் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இது கிழக்கு இமயமலைக்கு தெற்கே பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதி பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளது. 78,438 கிலோ மீற்றர் பரப்பளவு மற்றும் சுமார் 32 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இம்மாநிலத்தின் வடக்கே பூட்டான் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லையாக உள்ளன. கிழக்கில் நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோரமும், தெற்கே பங்களாதேஷ், மேற்கு வங்கமும், மேற்கில் சிலிகுரியும் காணப்படுகின்றன.