இந்தியாவை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு….

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற வினாவுக்கான உரிய பதிலை யாராலும் அளித்துவிட முடியாது. ஏனெனில், நிலையான நிலைப்பாடு என்று எதுவும் இருந்ததில்லை. இந்தியாவின் நலனும் மேலாதிக்கமும் விஸ்தரிப்புவாதமுமே இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளைத் தீர்மானித்து வந்துள்ளன.