இரோம் ஷர்மிளா ஷானு

2000-ம் ஆண்டு இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரத்தில் பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சில ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கியுடன் ஓடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரிழந்தனர். அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது.


ஏன் எதற்கு என்றே தெரியாமல் உயிர்கள் கண் முன்னே பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடித்தாள்
தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அந்த அதிகாரத்துக்கு பெயர்தான் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது.
யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்… ஏன்… என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். சிறு வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம்.

கொதித்து எழுந்த அந்த பெண் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு. அகிம்சை வழியிலான உண்ணாவிரத்தபோராட்டத்தை 2000 ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி தொடங்கினார் ஒருநாள் இரு நாள் இல்லை. 16 ஆண்டுகள் உண்ணாவிரதம். போலீஸ் காவிலில் வைக்கப்பட்டு மூக்கு குழாய் வழியாக திரவ உணவு மட்டுமே 16 ஆண்டுகள் செலுத்தப்பட்டது. ஆனால் இரோமின் நோக்கத்துக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.

விடிவு காலம் பிறக்கவில்லை தனது அகிம்சை வழி போராட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். ஆதனால் 2016 ஆம் ஆகஸ்ட் மாதம் தனது உண்ணாவிரதப்போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். 500 வாரங்கள் உலகில் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்து வேறு பரிணாமத்தில் போராட மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.

அண்மையில் சில நாட்களுக்கு முன்னாள் நடைபெற்ற இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், தனது மக்களின அவல நிலையைப் போக்க ராணுவத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடி பின்னர் மக்களை கேட்டுக் கேள்வியில்லாமல் கொன்றொழிக்கும் சட்டத்தை இல்லாமல் செய்வதற்காக தேர்தலில் போட்டியிட்ட இரோமுக்கு கிடைத்ததோ… வெறும் 90 வாக்குள்தான்.

எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ… அதே மக்கள்தான் ஷர்மிளாவின் இலட்சியத்தை அந்தப் போராட்டத்தின் தன்மையை கொடுரமாக சிதைத்தனர் அழித்தனர். உறுதி குலையாமல் கண்களில் நீர் சிந்தாமல் இராணுவ வெறியாட்டத்திற்கு எதிராக போராடிய அந்த மங்கை தேர்தலின முடிவில் கண்ணில் நீர் துளிகளுடன் Thanks For 90 Votes என்று மட்டும் கூறினார்( அந்த 90 பேருக்கும் நன்றி)

இதே நேரம் இவ்விடத்தில் இன்னொன்றையும் பதிவு செய்யவிரும்புகின்றேன். அமான் மணி என்பவர் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பாதாள உலக கோஸ்டியின் தலைவர் இவரும் அண்மையில் நடைபெற்ற உத்திரப்பிரதேச தேர்தலில் சிறையிலிருந்தவாறு போட்டியிட்டார். மக்கள் இவருக்கு வெற்றியைப் பரிசாக்கினர். ஆக மக்களின் சிந்தனை ஓட்டம் தான் என்ன? மக்கள் எதையுமே சிந்திக்காமல் வாக்குபோடுகின்ற இயந்திரங்களாக இருக்கும் வரை அரசியல் சாகடை என்ற கருத்து மேலோங்கத்தான் செய்யும்.

(Parthipan Varatharajan)