இறுதி யுத்தமும் இரைக்காக காத்திருந்த தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளும்.

2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன்.
நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன்.
பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது.