இலங்கைத் தமிழரின் சாதி வகைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை வடிவங்களும்!

சாதி அமைப்பு என்ற கொடூரமான சமூகக் கட்டமைப்பு இன்றுவரை இலங்கையின் வட பகுதியில் பல நூற்றாண்டுகளாக இறுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றது. இதைத் தகர்ப்பதற்கு காலத்துக்குக் காலம் ஒடுக்கப்படும் சமூகங்கங்களாலும், முற்போக்கு சக்திகளாலும் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், தமிழ் சமூகத்திலும் உலகிலும் பல சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், 30 வருடங்களாக தமிழ் தேசியத்தை நிலைநாட்ட போர் நடைபெற்ற போதிலும், ஒரு சில சிறிய அசைவுகள் ஏற்பட்டதேயொழிய, மாற்றங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப எதுவும் நடைபெறவில்லை.