இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலமே, இன்றைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைச் சமூகங்களின் வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுகின்றன.