இலங்கையில் இந்துவத்துவா சிவசேனா….?

ஈழ‌த்தில், இந்து ம‌த‌வெறி சிவ‌ சேனாவின் கிளை அமைப்பு ஆர‌ம்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. முன்பு தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌ம் பேசிய‌ ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌ம் த‌லைமையில், இந்த‌ ஈழ‌த்து சிவ‌ சேனா இய‌ங்க‌வுள்ள‌து. ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌ம், புலிக‌ள் இருந்த கால‌த்தில் தீவிர‌ புலி விசுவாசியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போது சிறில‌ங்கா அர‌சுட‌ன் நெருக்க‌மாகியுள்ளார்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் புங்குடுதீவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ உள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளின் நிதியுத‌வியில் புங்குடுதீவில் இருந்த‌ சிறிய‌ கோயில்க‌ள் எல்லாம் புன‌ர‌மைக்க‌ப் ப‌ட்டு பெரிய‌ அள‌வில் கும்பாபிஷேக‌மும் ந‌ட‌ந்த‌து.

ஈழ‌த்தில் கால் ப‌திப்ப‌த‌ற்கு சிவ‌ சேனா ஒரு பொருத்த‌மான‌ ந‌ப‌ரை தேர்ந்தெடுத்துள்ள‌து. ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌த்தின் செல்வாக்கு கார‌ண‌மாக‌, புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த் த‌மிழ‌ரில் க‌ணிசமான‌ தொகையின‌ரை, எதிர்கால‌த்தில் இந்து ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ளாக‌ மாற்ற‌ முடியும். அத‌ற்கான‌ அறிகுறிக‌ள் இப்போதே தென்ப‌டுகின்ற‌ன‌.

புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் ஒருவ‌ரின் பேஸ்புக்கில் எழுத‌ப் ப‌ட்ட‌, இந்து ம‌த‌வெறி சிவ‌சேனாவுக்கு ஆத‌ர‌வான‌ பிர‌க‌ட‌ன‌ம் இது:

//பொதுபல சேனாவை உருவாக முடிகிறது என்றால் ஏன் நாங்கள் சிவசேனாவை ஆதரிக்க கூடாது,இந்துவா குடும்பம் தானே சைவம் இருந்துட்டு போகட்டும்….

கிழக்கு சின்ன சவுதியாக மாறி வரும் காலத்தில், வடக்கில் அவைகள் உள் நுழைய தொடங்கும் நேரத்தில் சிவசேனா போன்ற அமைப்புக்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது….

சிவசேனா என்ன ஆர்.எஸ்.எஸ் வந்தால் கூட ஆதரிப்பது தான் புத்திசாலித்தனம்….//

உல‌கிற்கே நாஸ்திக‌ம் போதித்த‌, அறிவொளி இய‌க்க‌த்தை உருவாக்கிய‌ பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டு, ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் பேசுகின்ற‌ன‌ர்.

உல‌க‌ம் நாக‌ரிக‌ வ‌ள‌ர்ச்சியில் முன்னேறிச் சென்றாலும், இவர் போன்ற‌ இந்து அல்ல‌து இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள், எப்போதும் க‌ற்கால‌த்திற்கு திரும்பிச் செல்வ‌தைப் ப‌ற்றி க‌ன‌வு காண்கிறார்க‌ள்.

(Kalai Marx)