இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்

அத்துடன், சோசலிசம் பேசும் அந்த இயக்கம் முதலாளித்துவ அரசியல்வாதிகளைக் கொலை செய்ததைவிட இடதுசாரி அரசியல்வாதிகளையும், தொழிற்சங்கத் தலைவர்களையுமே கூடுதலாகக் கொலை செய்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆரம்பம் முதலே மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்துடன் தனது இயக்கத்தை ஆரம்பித்த ஜே.வி.பி., பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் பிர்சினைக்கு தீர்வுகாண எடுத்த அத்தனை முயற்சிகளையும் (இந்திய – இலங்கை ஒப்பந்தம், சந்திரிகாவின் தீர்வுத் திட்டம், மகிந்த ராஜபக்சாவின் சர்வகட்சிக் கூட்டம்) ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உருமய போன்ற சிங்கள இவாதக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது.
இப்படிப் பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

இவையெல்லாவற்றையும் விட, கடந்த 4 வருடங்களாக பதவியில் இருக்கும் ஐ.தே.க. அரசின் மக்கள் விரோத – தேச விரோத நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஜே.பி.பி. மறைமுகமாக மட்டுமின்றி நேரடியாகவும் ஆதரித்து வந்திருக்கிறது. தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கூட ஐ.தே.க. எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து ஐ.தே.க. வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே

எனவே, ஜே.வி.பி. வேட்பாளருக்கு வாக்களிப்பது தவறான அரசியல் கொள்ளை உடைய ஒருவருக்கு வாக்களிப்பதாகும்.
அடுத்த விடயம், ஜே.வி.பிக்கு வாக்களிப்பது பயனற்றது என்பது பற்றிய விடயம்.

ஜே.வி.பி. கடந்த காலங்களில் பெற்ற வாக்குகளையும், தற்போதைய கருத்துக் கணிப்புகளையும் எடுத்துப் பார்க்கையில், அக்கட்சி மொத்த வாக்குகளில் 5 சத வீத்தைக்கூட பெறுமோ என்பது சந்தேகம். எனவே, வெற்றிபெற முடியாத ஒரு வாக்காளருக்கு வாக்களிப்பது பயனற்றதும் வீணானதுமாகும்.

வாக்காளர்கள் இந்த உண்மைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு தமது வாக்குகளைப் பிரயோகிப்பது சாலச் சிறந்தது.