இலங்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் (பாகம் 1)

(சாகரன்)

கொஞ்சம் அரசியல் பேசிப் பார்க்கலாம் என்று இந்த பதிவை இடுகின்றேன் இதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு. அது பதிவின் முடிவில் தெரிய வரும். இலங்கை அரசியலை பேச விளைகின்றேன். இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறப் போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த பதிவை தொடர்கின்றேன்.
இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு, பின்பு இதற்குள் பாராளுமன்ற அகிம்சைப் போராட் வழிமுறைக்காலம், ஆயுதப் போராட்ட காலம், ஆயுதங்கள் மௌனிகப்பட்ட காலம் என்று இலங்கை அரசியலைப் பிரித்துப்பார்த்தல் நலம் என்று எண்ணுகின்றேன்.