இலவசக் கல்வியின் தந்தை (Father of free education)

C.W.W.கன்னங்கராவின் 136வது பிறந்த தினம் இன்று 13ந் திகதி ஆகும்.
மனிதனின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலான மனிதர்களின் வாழ்வு பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றபடி அமைந்துள்ளது. இவ்வாறு கோடானுகோடி மனிதர்கள் அன்று முதல் இவ்வுலகிற்கு வந்து சென்று விட்டார்கள். அவர்களது தடயமே இவ்வுலகில் இல்லை. அதேநேரம் சில மனிதர்களின் வாழ்வு மனித வரலாற்றில் அழியாத்தடம் பதித்தவையாக அமைந்திருக்கின்றது.