இவர்கள் போராளிகளா?

1987 ஐப்பசி பத்தாம் நாள் புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதலை தொடங்கினார்கள் .அப்போது நான் சண்டிலிப்பாயில் இருந்தேன்.மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு இந்திய இராணுவ வண்டியில் சில இராணுவத்தினருடன் அவர்கள் காரைநகரை நோக்கிப் போய்க்கொண்டிரைந்தார்கள்.அப்போது நான் எனது உறவினர், ஒருவருடன் வீதியில், நின்று கதைத்துக்,கொண்டிருந்தேன்.
ஒரு சில மணி நேரங்கள் கழித்து நான் சங்கானை சந்தைக்கு மரக்கறி வாங்க போனேன்.அப்போது ஒருவர் வடக்கத்தையாங்களை வெட்டவேண்டும்.விடக்கூடாது என சத்தம் போட்டு கொண்டே வந்தார்.


நான் சந்தைக்குப் போனபோது அந்த இந்திய இராணுவ வண்டியை புலிகள் ்பொன்னாலைப் பாலத்தில் மறித்தனர.அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இறங்க புலிகள் அவர்களை கைது செய்தனர்.அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டபோது அவர்களை கத்திகளால் வெட்டி கொடுமைப் படுத்தியதாக கதைத்துக்கொண்டனர்.
நான் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வீதியில் வடக்கத்தையானை வெட்ட வேண்டும் என்றவர் அங்கே என் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தார்.என்னைக் கண்டதும் அண்ணனிடம் இந்த தம்பி யார் எனக் கேட்டார்.அண்ணன் என் தம்பிதான். பயப்படவேண்டாம, என்றார்.
அவர் வேறு யாருமில்லை .மன்னார் மாவட்ட சபையில் உப தலைவராக இருந்த கைலாசபிள்ளை.வெளியில் புலி ஆதரவாளராக நடித்தபோதும் புலிகளின் கொலைவெறியை தன்னளவில் வெறுப்புற்றவர்.அவர் அந்த இந்திய இராணுவத்தை கொடுமைப்படுத்திய விதத்தை கண்ணால் கண்டு என் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
புலிகள் அந்த இந்திய இராணுவத்தை சித்திரவதைகள் செய்தே கொன்றனர்.அதன் பின் கைப்பற்றிய இராணுவ வண்டியை சுழிபுரம் துரையப்பா கடையின் முன்பாக கொண்டு வந்து நிறுத்தினார்கள் .அந்த வண்டியை அங்கிருந்து அகற்றுமாறு பொதுமக்கள், கோரியபோது துரையப்பா கடை உரிமையாளர்,இரண்டு இலட்சம் தந்தால் வண்டியை அகற்றுவதாக கூறினார்கள்.பொதுமக்கள் எவ்வளவு கெஞ்சியும் அகற்றவில்லை. இறுதியில் பணம் பெற்ற பின்பே அகற்றினார்கள்.
இது புலிகளின் மனிதாபிமானம் மக்கள் மீதான அக்கறை எவ்வளவு என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சியே

(Vijay Baskaran)