ஈழத் தமிழர்களின் குடிசனப் பரம்பலை எவ்வாறு சீராக்கலாம்..?

இந்த சனத்தொகை குறைவு யாழப்;பாணத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஆறு இற்கு மட்டுப்படுத்திய நிகழ்வாகவும் வெளிப்படுகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த ஆரம்ப நாட்களில் பாரியளவு தமிழ் மக்கள் மேற்குலக நாடுகளுக்கும் ஏன் இந்தியாவிற்கும் அகதிகளாக பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயரவில்லை. போராட்டம் தனி ஒரு அமைப்பின் ஏக உரிமையாக பரிணாமம் அடைந்த பின்பே இந்த தொகை அதி வேகமாக அதிகரித்தது. என்பதை நாம் புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடியும்.

இதில் மேற்லக நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தவர்கள் அங்கு இன்று குடியுரிமை பிரஜா உரிமை என்ற அளவிற்கு தம்மை நிலை நிறுத்தி நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடும் நிலமைகளே அதிகம் ஏற்பட்டிருக்கின்றது.

அங்கேயே பிறந்த பிள்ளைகள் கல்வி தொழில் குடும்பம் என்று தம்மை தகவமைத்துக் கொண்டு எமது மூதாதையர் ஈழத்தில் இருந்தார்கள் என்ற ஒரு சொற்றொடருக்குள் பெரும்பாலும் தம்மை சுருக்கிக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தாயகம் திரும்புவது இவர்களின் எதிர்காலத்தில் சாத்தியமா என்றால் மிகக் குறைவாகவே காண முடிகின்றது. அவரகள் வாழும் நாடுகளில் உலக ஒழுங்கில் ஏதாவது பாரிய மாற்றம் எற்பட்டால் ஒழிய இதற்கான வாய்ப்புகள் குறைவே.

மேற்குல நாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஆங்கிலம் கலந்த தமிழில் எமது கலை கலாச்சாரா பெருமிதங்களை விடுதலைப் போராட்ட கோஷங்களை வெளிப்படுத்தி இடையிடையே அதிகம் தமது பெற்றோரின் விருப்பங்களுக்காக தாயகம் சென்று மாதம் ஒன்றிற்கு தமது உறவினர்களுடன் இருந்துவிட்டு திரும்பி வரும் நிலமையிற்குள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையினர் வந்தும்விட்டனர்.

இந்த செயற்பாடும் இந்த இரண்டாம் தலை முறையினருடன் நின்றுவிடக் கூடிய நிலமைகளே கூடிய நிலமைகளே அதிகம் காணப்படுகின்றது.
ஆனால் தமிழ் நாட்டு முகாங்களிவ் அகதி என்ற அடைமொழியுடன் வாழும் ஈழத் தமிழர் கல்வி பொருளாதாரம் இருப்பிடம் தொழில் என்ற வகையிலும் தமது அடையாளம் உரிமை என்ற வகையிலும் பாரியளவு மேம்பாட்டை அடையாது முகாம் வாழ்க்கையிற்குள் பழக்கப்பட்டும் விட்டனர். மறுவாழ்வு மையமாக மாற்றப்பட்டாலும் அகதிகளாகவே வாழ்கின்றனர்.

2009 யுத்தம் முடிவுற்ற பின்பு மேற்குலக நாடுகளில் இருந்து முதலாம் தலைமுறையினரில் சில நூறு பேர் மாத்திரம் தாயகத்தில் பாதி நாளும் மீதி நாட்கள் தமது மேற்குலக சலுகையிலும் வாழும் வாழ்க்கையை அமைத்துவிட்டனர் இதில் கூட முழுமையாக பெட்டி படுக்கையுடன் தாயகம் திரும்பிய முதலாம் தலைமுறையினரை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே எம்மால் சுட்டிக் காட்ட முடியும்.

அங்கு வாழும் மக்களால் இயல்பாக உருவாகும் இனப் பரம்பல் பெருகத்திற்கு அப்பால் வடக்கு கிழக்கில் உள்ள ஈழத் தமிழர்களின் சனத் தொகைப் பரம்பலை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதற்கான ஒரு திறவு கோலாக தமிழகத்தின் அகதிகள் முகாமில் இருக்கும் மக்கள் ஈழத்திற்கு திரும்பி சென்று தமது வாழ்க்கையை தொடங்குவதற்குரிய கருத்தியலை செயற்பாட்டை ஊக்கிவிக்க வேண்டும் என்ற கருதுருவாக்கத்தை செயற்பாட்டை நாம் செய்ய வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதன் மூலம் தமிழத்தில் 30 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம் வாழ்விற்கு முடிவுகளை ஏற்படுத்தி ஈழத் தமிழர்களின் சனத் தொகைப் பரம்பலை அதிகரிப்பதற்கான ஒரு செயற்பாட்டை வேகப்படுத்தலாம் என்ற விடயத்தை முன்வைக்க விரும்புகின்றேன்.

இதுவும் கூட அந்த மக்களின் உடன்பாட்டுன் மட்டுமே செயற்படுத்த வேண்டும். வலிந்து செயற்பாடுகள் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும்
இதற்கு தமிழக முகாங்களில் இருப்பவர்கள் இதுவரை தமிழகத்தில் சட்டவிரோதமாக தமிழகத்தில் இருந்தார்கள் போன்ற தண்டப்பணம் செலுத்தி தம்மை விடுவித்துதான் இலங்கை திரும்ப வேண்டும் என்ற நடைமுறை… நீக்கப்பட வேண்டும். தாயகத்திற்கு திரும்புவதற்கான பணச் செலவு தமது வாழ்கையைத் தொடங்குவதற்காக ஆரம்ப குடிமனை இருப்பிடம் தொழில் போன்றவற்றில் இலங்கை இந்திய அரசுகள் ஏனைய தொண்டர் நிறுவனங்கள் இணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது செயற்படுத்தியிருக்கும் மறுவாழ்வு மையங்கள் என்ற மாற்றங்களும் அந்த அகதிகளின் மறுவாழ்விற்கான அதிகரிக்கப்பட்ட சலுகைகளும் இலங்கை தமிழ் மக்களுக்கான அடையாளத்தை வாழ்வியல் உரிமையை உறுதி செய்ய போதுமானதாக்க நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
ஆனாலும் ஈழத் தமிழ்p அகதிகள் நலன்களுக்காக உருவாகியிருக்கும் புதிய திமுக அரசின் செயற்பாடுகள் வரவேற்கத் தக்கன. நம்பிக்கை கீற்றுகள் சிலவற்றை ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

இலங்கை பேரினவாதம் இலங்கையில் தமிழர்களின் இனப் பரம்பல குறைவதையே வெளிப்படையாக கூறாவிட்டாலும் விருப்பத்துடன் செயற்படுத்;துவர். இது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே திட்;டமிட்ட கடீயெற்றங்கள் இனக் கலவரங்கள் இன்ன பிற பேரினவாத சிந்தனைச் செயற்பாடுகள் மூம் ஏற்பட்டிருந்தாலும் ஆயுதப் போராட்டமும் அதனைத் தொடரந்து யுத்தம் முடிந்த நிலையும் இவற்றை இன்னும் இறுக்கமாக்கி யே இருக்கின்றது. அதனையே நாம் யுத்தம் முடிவுற்று இந்த 12 வருடங்களில் கண்டும் வருகின்றோம். அந்த வகையில் மீள் குடியேற்றம் என்பதில் அதிக அக்கறை உளசுத்தியுடன் செயற்பட மாட்டார்கள்.

பிரதான நிரோட்த்தில் இருக்கும் தமிழர் தரப்பும் வடக்கு கிழகை;கை விட்டு வெளியேறுவதை மறைமுகமாக வெளிப்படுத்தும் பேச்சுகளும் கூடவே இரு கரம் கூப்பி வாருங்கள் நாம் உங்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தாயகத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கு எம் அளவிலான செயற்பாடுகளை கொண்டிருக்கின்றோம் என்று எதனையும் சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் இருந்தாலும் அவரகள் ஈழத் தமிழர் அதிகார அரசியலில் பங்காளிகளாக இதுவரை வர முடியவில்லை.

எனவே இலங்கை அரசோ அல்லது பிரதான நிரோட்த்தில் இருக்கும் பாராளுமன்ற தமிழ் தலமைகளோ மீள் குடியேற்றம் செய்யும் மக்கள் மேற்கூறிய அடிப்படை தமிழகத்தில் இருந்து விடுவித்தல் தாயகத்தில் மீள் குடியெற்றம் செய்தல் என்பவனவற்றில் விருப்புடன் செயற்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் இந்த அகதிகள் விடயம் இரு நாடுகள் சம்மந்தப்பட்டு சர்வ தேச விடயமாக இருப்பதினால் இதனை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரு பொதுவான உடன்பாட்டை உருவாக்கி கௌரவமான மீள் குடியேற்த்தை ஏற்படுதல் வேண்டும்.

இதன் மூலம் பாவைனையில் இல்லாத வீடுகளும் தரிசு நிலங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கல்வி பொருளாதாரம் குடிசனப்பரம்பல் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்து ஒரு பலமான சமூகமாக வடக்கு கிழக்கு தமிழர் பிரNதுசங்களை நாம் கட்டியமைக்க முடியும்.

இங்கு மலையக மக்கள் பற்றி விடயம் அதிகப் பேசப்படாவிட்டாலும் இன்னமும் மலையகத்தில் குடியுரமை அற்று இருக்கும் மக்கள் முழமையாக குடியுரிமை வழங்கி அவரகளுக்கான இருப்பிடம் சுய தொழிலுக்காக நிலங்கள் வழங்கப்பட வேண்டும்.

அதே போல் இலங்கையிற்குள் அதிகமாக இடம் பெயரந்து புத்தளம் போன்ற இடங்களில் வாழும் யாழ்ப்பாணத்து வடக்கு முஸ்லீம்மக்கள் மீள் குடியேற்றம் செயற்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்