உலகத் தமிழ் நாடக அரங்கு

உலகத் தமிழ் அரங்க ஆராய்ச்சி மையம்

தமிழ் நாடக அரங்கு இன்று உலகம் தழுவிய ஒன்றாய் பரந்து பட்ட ஒரு தளத்தில் உரையாடலுக்கான காத்திரமான செல்நெறிகளையும், பல்வேறு விதமான சிந்தனைப்பள்ளிகளையும்(school of thorts) கொண்டது மரபு வழி அரங்குகளயும் நவீன நாடக ஆற்றுகைகளையும் , கொண்டதே நம் தமிழ் அரங்கு.

தமிழ்நாடு அதன் வழி வந்த மரபு வழி அரங்குகள், நவீன அரங்கவியலாளர்கள் ஆய்வாளர்கள் பல்கலைக்கழகம் சார் அரங்க புலமையாளர்கள்.நடிப்பு பள்ளிகள் கூத்து பட்டறை முதலாக முருகபூபதி,பிரசாத் ,பார்த்திபராஜா,சண்முகராஜா என நீளும் நவீன அரங்க ஆளுமைகள். பத்மசிறி.ந.முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,பிரசன்னா ராமசாமி,பேராசிரியர் மு.ராமசாமி,பேராசிரியர்.இரா.இராஜு,பேராசிரியர்.க.ஆறுமுகம் ,வேலுசரவணன் அவர்தம் நாடகக் குழுக்கள். கிராமங்கள் தோறும் இயங்கும் தெருக்கூத்து மன்றங்கள் தமிழ் நாடகத்தின் உயிர்ப்பை தமிழ் நாட்டில் தக்க வைப்பனவாக உள்ளன.

ஈழத்திலும் நம் பாரம்பரிய அரங்கு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கூத்து மரபின் பல்வேறு வடிவங்கள்.வடமோடி,தென்மோடி,வசந்தன்,காத்தவராயன்,கோவலன் கூத்து என் நம் மண்ணின் கலைஞர்கள் வழி செழுமையான மரபாய் பேணப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,கிழக்குப் பல்கலைக்கழகம் இரண்டிலும் அரங்கு கற்கை நெறியாய் புலமை சார் மரபில் புதிய தரிசனங்களை காண்கிறது.
நம் மத்தியில் உள்ள பேராசிரியர்.மெளனகுரு,சிரம்பரநாதன்,ஜெய்சங்கர் ஆகியோரும் அவர்கள் வழி வந்தோரும்
நாடக அரங்க கல்லூரி குழந்தை சண்முகலிங்கம், அவைக்காற்றுக் கலைக் கழக பாலேந்திரா,ஈழக்கூத்தன் தாசிசியஸ்
அரங்க ஆய்வுகூடம்,தேவானந்,தர்மலிங்கம்,எஸ்.ரி.குமரன் என நவீன அரங்கினர்.
திருமறைக்கலாமன்றம் ஜோன்சன்ராஜ்குமார் .
மன்னார் குழந்தை,யாழ்ப்பாணம் திவ்வியநாதன்
கொழும்பு அரங்க கலைஞர்கள் அவர்தம் நாடகங்கள்
மலயக அரங்க கலைகள் அதனோடு இணைந்த கலைஞர்கள்.
மலேசியா சிங்கப் பூர் என கிளை விரித்து நிக்கும் தமிழ் அரங்கு.
ஐரோப்பிய நாடுகள்,இங்கிலாந்து,கனடா,அவுஸ்ரேலியா என அந்தந்த நாடுகளில் இயங்குகின்ற நவீன அரங்க அமைப்புகள்.மரபுவழி அரங்க கலைஞர்கள் அவர் தம் படைப்புகள்
இவை எல்லாம் சேர்ந்ததுதான் உலகத் தமிழ் நாடக அரங்கு.

உலக தமிழ் நாடகவியலாளர்களை சரியான முறையில் இணைக்க கூடிய வகையில் கருத்தரங்கு,செயலமர்வு,நாடக அளிக்கைகள் என காத்திரமான வகையில் விமர்சனங்களின் வழி பல ஆளுமைகளின் அனுபவங்களை ஓரிடத்தில் சங்கமிக்கும் வகையிலான உலகத் தமிழ் அரங்க மகாநாடு நடத்தப் பட வேண்டும்.
தமிழ் அரங்கவியலாளர்கள் அனைவரும் இணைந்து நன்கு திட்டமிடலில் செயல் படுத்த வேண்டும் .
உலகத் தமிழ் அரங்க ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்குவோம்.

(Bala Sugumar)