எட்டு…! எட்டு….!! எட்டு…..!!! ‘மே தினம்’

இதில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலும்…. தேய்விலும்…. சோசலிசத்தின் வளர்ச்சியிலும்… கம்யூனிச உருவாக்கத்திற்குமான கால கட்டங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு சமூக அமைப்பு மாற்றங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது என்பதை சமூக விஞ்ஞானத்தின தந்தைகள் மாக்ஸ், ஏங்கல்ஸ், டார்வின், லெனின் அவர்களின் வழித்தோன்றல்களான ஸ்டாலின், மாவோ, கோசிமின், பிடல் காஸ்ரோ, பத்மநாபா என்று பலரும் எதிர்வு கூறி அதனை நிறுவுவதற்காக தமது வாழ்நாட்களை அர்பணித்து போராடி மரணித்தும் விட்டனர்.

இவர்கள் காட்டிச் சென்ற வழிகளை அவர்களின் சகாக்கள் மேலும் செழுமைப்படுத்தி தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மானிட குலத்தின மீட்சிக்காக பேரிடர் காலத்தில் மட்டும் அல்ல சாதாரண காலத்திலும் அர்பணிப்புடன் வரலாற்றுக் கடமைகளை செய்தவண்ணம் தமது பயணங்களை தொடருகின்றனர் மக்கள்.

இழப்பதற்கு ஏதும் இல்லை எமது உயிர்களைத் தவிர என புரட்சியின் முன்னிலை சக்தியான பாட்டாளி வர்க்கத்துடன் கை கோர்த்து செயற்படுவதில் இவர்கள் சளைக்கவில்லை. இதனை அடையாளப்படுத்தி நிற்கும் நாளே இன்றைய மே தினம்.

இவர்களின் செயற்பாடுகளை எதிர்புரட்சிகர சக்திகள் துரோகம் என்றும் கம்யூனிச சர்வாதிகாரிகள் இவர்கள் என்றும் மத மறுப்பாளர்கள், நாத்திகர்கள் கடவுள் மறுப்பாளர் என்ற பிரச்சாரங்கள் மூலம் சாமான்ய மக்களின் பொது போக்கு நம்பிக்கைகளை தமக்கு மூலதனமாக்கி குழப்பங்களை உஐவாக்கி செயற்பட்டும் வருகின்றனர்.

யாவரும் சமத்துவமாக வாழவேண்டும் இதற்கு மனிதன் தமது இயலுமைக்கு ஏற்ப உழைப்புக்களை செலுத்த வேண்டும்… உழைப்பில் வரும் வருமானம் தேவைகளுக்கு ஏற்ப பகிரப்பட வேண்டும் என்பதை பலரும் கொள்கை ரீதியாக சாமான்ய மக்கள் ஏற்றுக் கொண்டாலும் மக்களின் சுயநலன்களை மேலோங்க செய்யும் ‘நவீன்” தற்போதைய ஒழுங்கு ஒழுங்கு முறை தனி உடமையாக வாழும் சமூக அமைப்பை முன்னிறுத்தி தனது பயணங்களை பெரும்பாலும் மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் அண்மையில் ஏற்பட்டு இன்றுவரை நடைபோடும் கொரனா வைரஸ் சமத்துவம் எவ்வளவு தேவையானது நோய் என்றும் அதற்கான மருந்து, வைத்தியம் என்றும் வந்து விட்டால் யாவரும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்பதுவும் இதற்குள் பசி யாவருக்கும் பொதுவானது எனவே பசியை போக்குதல் யாவருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும் என்ற சமத்துவக் கொள்கைகளையும் மனிதனால்… மனிதானால் விஞ்ஞானத்தால் அறியப்படும் மருந்துகளும் சிகிச்கைளும்தான் இந்தப் பேரிடரிடரில் இருந்து மனத குலத்தைக் காப்பாற்ற முடியும்.

மாறாக எமக்கு அப்பால் உள்ள அறியப்படாத சக்தி ஒன்றினால் அல்ல என்று உணரப்படுவதும் நடைமுறைகளாகி வருகின்றன். ஆனால் மிக நீண்ட காலமாக நம்பப்பட்ட விரும்பப்பட்ட முறமையில் இருந்து அறிந்து, தெளிந்து வெளிவருவது என்பது இலகுவான காரியம் அல்ல. இதற்கு ஒரு நீண்ட காலம் தேவையாகவும் இருக்கும். இது ஒரு தொடர்ச்சியான ஓட்டத்தின் முடிவிலேயே சாத்தியம் என்பதுவும் இங்கு உணரப்பட்டும் இருக்கின்றன.

1886 ம் ஆண்டு மே மாதம் சிக்காகோவில் 8 மணித்தியாலயம்தான் வேலை என்று தொழிலாளர் வர்க்கம் போராடி வெல்லும் வரைக்கும் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்த தொழிலாள ‘அடிமைகள்”, சமான்ய மக்கள் ஏன் தொழிற்சாலைகளின் முதலாளிகள் இது சாதியமா….? ஏனறு நம்பி இருந்திருப்பார்களா..?
அர்பணிப்புடன் கூடிய அந்த போராட்டமே இன்று வரை 8 மணி நேரம் வேலை என்ற பொது போக்கை நிறுவி ஓரளவிற்கேனும் நடைமுறைப்படுத்திருக்கின்றது.

சாமான்ய மக்கள் அந்த 8 மணி நேரமே நியாமானது, அங்கீகரமானது, சட்டமானது மனித இயலுமைக்கு ஏற்புடையது என்ற எற்றுக் கொண்டும் விட்டார்கள். இதற்குள் ஒரு உடம்பியல் விஞ்ஞானமம் உண்டு.
இதற்கு மேலும் வேலை என்றால் ‘….எங்களை போட்டு முறிக்கின்றான்….” என்ற எமது புலம்பல் ஏற்புடையதாகியுமுள்ளது. இந்த புலம்பல் சரியானது என்று சக மனிதர்கள் ஏற்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. இதனை 1886 ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு யாரும் நினைத்திருப்பார்களா…?

இதனையொட்டி உருவான மேதினம்.. உழைப்பாளர் தினம்…. தொழிலாளர் தினம்… இன்று. இதற்கான தாற்பரியத்தை புரிந்து கொள்வோம். இது எவ்வாறு சாத்தியமானது என்பதை படிப்பினையாக கொண்டு மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டத்திற்கு மனித குலத்தை அழைத்துச் செல்ல நாம் இணைந்து செயற்பட வேண்டிய கால கட்டம் இது. பல பிரசங்கங்கள், புத்தகங்கள், கலந்துரையாடலகள் ஏற்படுத்தாத சிந்தனை மாற்றத்தை இந்த கொரானா என்ற பேரிடர் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை ஒரு நல்ல வேகமெடுக்கும் திருப்பமாக கொண்டு பயணப்படுவோம்.

அது என்ன எட்டு…. எட்டு… எட்டு….. பலருக்கு சொல்லாமலே புரிந்திருந்தாலும் சொல்லித்தான் வைப்போமே எட்டு மணி வேலை, எட்டு மணி பொழுது போக்கு, எட்டு மணி ஓய்வு(Eight hours ‘labour’, Eight hours ‘recreation’, Eight hours’ rest” என்று ஒரு நாளை நாம் மூன்று எட்டாக பிரித்து வேலை நித்திரை என்று 16 மணி நேரத்தை சரி சமமாக பகிர்ந்து மிகுதி எட்டு மணி நேரத்தை குடும்பம், சமூகம், நட்பு என்று செலவிடுவோம். இதற்குள் கொண்டாட்டங்களும் இருக்கும்.. போராட்டங்களும் இருக்கும், வாசித்தலும் இருக்கும் வரைதலும் இருக்கும் ஏன் எழுத்துக்களும் இருக்கும். காதலும்.. காமமும்… களியாட்டமும்… கொஞ்சல்களும்… விஞ்சல்களும்… அழுகையும்.. அரவணைப்பும்… ஏகாந்தமும் இருக்கும்.

வாருங்கள் சகாக்களே இணைந்த கரங்களாக பயணிப்போம் தனிக் கரம் உடைக்கப்படலாம். இணைந்த கரங்கள் முறிக்க வருபவரின் கரத்தையே உடைதெறியும்… தீமையை ஒழிப்போம்…. நன்மையை செய்வோம்.. அறம்சார்ந்த சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

இதற்குள் தினம் 6 மணி நேரம் 5 நாள் வேலை என்ற பின்லாந்து சுவீடன் போன்றஉஸ்கன்டிநேவியன் பெண் தலைவர்களின் குரல்களில் உள்ள யதார்த்தங்களை நோக்கி நகர வேண்டி விஞ்ஞான வளர்ச்சியும் முன்னேற்றமும் மனித குலத்தில் ஏற்பட்டு வருகின்றது. இதற்குள் மனிதன் வாழ்வதற்குரிய (40 மணி நேரத்திற்குரிய போதிய) ஊதியமும் வழங்கப்படும் என்ற இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற் புரட்சியை உள்வாங்கிய செய்திகளின் செயற்பாட்டை நோக்கி நகர வேண்டிய காலம் எங்கள் படலைகளையும் தட்டத் தொடங்கிவிட்டதையும் நாம் கவனத்தில் எடுத்துதான் ஆக வேண்டும்.

புதிய சமத்துவமான சமூகத்தை கட்டியமைக்க உழைக்கும் மக்கள் நாம் ஒன்றிணைவோம். பேரிடர் தந்த அனுபவத்தை நாம் உள்வாங்கி விஞ்ஞானமும் மனித முன் முயற்சியமே மனித குலத்தில் வாழ்தலை உறுதிப்படுத்தும் என்பதை இயற்கை சார்ந்த செயற்பாடுகள் மூலம் நிறுவி நிற்போம்.