என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)

(சாகரன்)

வெற்றி மாறன் மீண்டும் தான் ஒரு சிறந்த நெறியாள்கையாளன் என்று நிரூபித்திருக்கும் திரைப்படம் வட சென்னை. நூற்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள்… பல நூறு சம்பவங்கள்.. வசனங்கள்… பல கிளைக் கதைகள் எதிலும் சோடை போக விடாமல் நெறியாள்கை செய்வது என்பது மிகவும் கடினம் அது ஒரு கூட்டுழைப்பால் மாத்திரம் சர்த்தியம். இதற்காக உழைத்த அவரது குழுவினருக்;கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும்.வட சென்னை என்ற கடற் தொழிலாளர் கிராமம். தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னையின் ஒரு ஓரத்தில் இருக்கும் கிராமம். ஜல்லிக்கட்டு போராட்டம் உட்பட பல போராட்டங்களின் இறுதிவரை உறுதியாக நின்று ஆளும் வர்க்;கத்தினால் அவ்வப்போது உருகுலைக்கப்படும் கிராமம் ஆனாலும் மக்களின் உரிமைப் போராட்டம் என்று வந்தால் மீண்டும் மீண்டும் எழுந்து வரும் கிராமம்.

கடற் தொழிலை பிரதான தொழிலாக கொண்ட கிராமத்தில் படித்தவர்கள் அதிகம் இல்லையாகினும் பகுத்தறிவும் மனிதாபிமானமும் உள்ள நடைமுறை ‘சமத்துவ..?” செயற்பாடாளர்(கள்) ஐ கொண்ட கிராமம். ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு மக்கள் நலன் தலைவன்(ர்) உருவாக்கப்பட்டால் ராஜன் போல் அவர்களில் ஒருவரால் அழைக்கப்பட்டு வெட்டி சாய்க்கப்படும் வழி தவற்றிய கூட்டத்தையும் தன்னகத்தே கொண்டது. கொலையின் போதும் ‘… வலிக்காமல் இருக்க குத்தி சாய்த்து விடு…” என்ற மனிதாபிமானம் இழையோடும் உறவுகள். இவர்களையே ஆளும் வர்கமும்; சட்டசபை அரசியல் வாதிகளும் தமது நலன்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

பல்தேசியக் கம்பனிகளும் இதற்குள்ளாலேயே இது போன்ற கிராமங்களுக்குள் உள் புக முயல்கின்றனர்.
திரைப்படத்தின் சிறைச்சாலைச் காட்சிகள் சிறைச்சாலைக்குள் நடைபெறும் ‘செல்வாக்கு” செலும் செயற்பாடுகளை 80 களின் முற் கூற்றில் சென்னைச் சிறைச்சாலை ஒன்றில் சில தினங்கள் நேரடியாக அனுபவித்த அனுபவங்கள் எனக்கு ஞாபகம் ஊட்டிச்சென்றது என்னமோ உண்மைதான். அங்கு இரு கட்சி அரசாங்கங்கள் எதிரும் புதிருமாக அடாவடித்தனம் செய்து வருவதும் இதில் பல ‘அப்பாவிகள்” பலி ஆவதும் இதற்கு சிறை அதிகாரிகள் ஆசீர்வாதம் அளிப்பதும் ஒன்று பொய் இல்லை. இதனை சிறப்பாக சொல்லி இருக்கின்றது திரைப்படம்.

ஒவ்வொரு மனிதனும் ‘…..எந்த ஊருக்கு போனாலும் ஊர் இருக்கும் என்ற நம்பிகையிலேயே ஊரை விட்டுப் போகின்றாங்க…” என்ற உயிர்புள்ள வசனங்களை மிகவும் பொருத்தமான இடத்தில் அள்ளித் தெளித்த விடயம் வெற்றி மாறனின் திரைப்படத்தில் வனசங்களின் தாகத்திற்கு ஒரு சிறு உதாராணம்.

தனுஷ், சமுத்திரகனி, அன்றியா, ஜஸ்வர்யா என்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதே உண்மை. அதுவும் வட சென்னைப் பாஷையை(இதற்கான பின்னணி குரல் கொடுத்தவர்கiளுயம் இங்கு பாராட்டியே ஆகவேண்டும்) அச் சொட்டாக பேசுதல் அதற்கான மானரிசத்தை வெளிப்படுத்தல் போங்கள் வடசென்னை கிராமத்தில்; வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது திரைப்பட பார்வையாளர்களுக்கு.

சம காலத்தில் வெளிவந்த ‘சர்கார்”; சமூகப்பிரச்சனையை சொன்னது என்பதை விட இத் திரைப்படம் அதிகம் சொல்லி இருக்கின்றது. சர்காரில் உள்ள தனி மனித பயங்கரவாதம் இரத்தம் அதிகம் சிந்திய வட சென்னையில் படத்தில் என்னால் அதிகம் உணர முடியவில்லை.

பிரச்சனைகளை களைய வழி முறைகளை எவ்வாறு கையாளுவது என்பதை மீண்டும் ஒரு இராஜனை உருவாக்கி தீர்வாக வைத்திருப்பதில் எனக்கு அதிகம் உடன்பாடு இல்லை. பதிலாக பல்தேசியக் கம்பனி ரோட்டு போடுகின்றோம் அரசாங்க உத்தியோகம் தருகின்றோம் நிலத்தை விடுங்கள் வீதியை அகலப்படுத்த என்று உள்ளுர் ‘குணா”க்களை அழைத்துக் கொண்டு புறப்பட்ட போது கிராமத்து அப்பாவி மக்களின் குரல்கள் எழுப்பிய எதிர் நறுக்கு கேள்விகளும் இதனைப் பொதுமைப்படுத்தி தனுஷ் எழுப்பிய ‘தலமை”க் கேள்விகளையும் ஒரு மக்கள் இயக்கமாக கட்டியமைக்கும் பாதையை நோக்கி நகர்த்தி இதனை வடசென்னைக்கு அப்பால் தமிழ் நாட்டில் இருக்கும் பல ‘வடசென்னை”களுக்கும் ‘திருநெல்வேலி”களும் நகர்த்துவதாக திரைப்படத்தை முடித்திருக்கு வேண்டும்.

அன்றேல் இதுவும் மீண்டும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவமும் அல்லது ஒரு ராஜனின் படுகொலை அல்லது ஜல்லிகட்டில் இதே கிராம மக்களை அடிவாங்கி சின்னா பின்னமாக்கிய போன்ற விடயமாகவே தொடரப் போகின்றது.
ஆனாலும் வடசென்னை மட்டத்திலாவது ஒரு பொறியை தட்விட்ட செயற்பாட்டிற்காக இத்திரைப்படத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த சமூகத்திற்குள் புரையோடி இருக்கும் வன்முறைச் ‘சீரழிவை’ தடுத்து நிறுத்தும் ஒரு பாதையை வெற்றி மாறனும் காட்டத் தவறவிட்டுவிட்டார் என்ற நியாயமாக கேள்வி என் பக்கத்தில் இல்லாமல் இல்லை. இதனை இனி வரும் திரைப்படங்களில் நிறை வேற்றினால் வெற்றி மாறன் ஒரு பேசப்படும் மலையாள திரைப்பட இயக்குனராக தொடர வாய்ப்புகள் அதிகம்அட்டக்கத்தி ரஞ்சித் ‘கபாலி”யிற்கு தாவியது போல் வெற்றிமாறன் தாவாமல் இருந்தால் தமிழ் திரைப்பட உலகம் மலையாளத் திரைப்பட உலகம் போல் இனி வரும் காலங்களில் பேசப்பட வாய்புகள் உண்டு.