எமது 2017 மேதினப் பிரசுரம்

(உள்ளாட்சி அதிகாரத்தினூடாக செய்யப்பட வேண்டிய காரியங்களும் இதில் இடம் பெறுகின்றன. காலப் பொருத்தம் கருதி இங்கு பதிவிடப்படுகிறது)

மக்கள் சார் சீர்திருத்தங்களை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
2017 மேதின பிரகடனம்
உலகத்தொழிலாள வர்க்கம் மிகப்பெரும் சவால்களை எதிர் நோக்கி நிற்கும் தருணத்தில் நாம் மேதின நிகழ்வை நினைவு கூருகிறோம்.
உலகத்தை அச்சுறுத்தும் யுத்த அபாயம் சூழ்ந்துள்ள நிலையில் அடிப்படைவாத – தேசியவாத அலை உத்வேகம் பெற்றுள்ள நிலை. மாத்திரம் அல்ல.

வட அமெரிக்கா ஐரோப்பாவிலும் உலகளாவிய அகதிகள் நெருக்கடி யுத்தம் பயங்கரவாதம் பேரழிவு உலகின் மனித குலத்தின் ஒருபகுதியினர் மீது திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழிநிலையில் தான் இந்த மேதினம்.
ஏற்றத்தாழ்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது .
உலகின் கால்பங்கினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரம் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரின் கைகளில். உலகளாவிய சமூக நீதி இந்த அவக் கேட்டுடன் தான்இருக்கிறது.
வறுமை ,போhசாக்கின்மை, சுற்றாடல் பேரழிவு, காலநிலை மாற்றம், வரட்சி குடி நீர்பிரச்சனை என்பன விஸ்வரூபம் எடுத்துள்ளன.
இலங்கையின் சுகாதாரம் கல்வி சேவைத்துறைகள் நலிவடைந்துள்ளன.
பெருவாரியான மக்களுக்கான வாழ்வுக்கு தகுந்த சூழல் மகிழ்ச்சியாக சமாதானமாக கண்ணியமாக வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள் மாதக்கணக்கில் தொடர்கின்றன.
தவிர யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் மக்களின் காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்கிறது.
பொதுவாகவே நிலமற்றவர்கள் வடக்குகிழக்கில் பரவலாக காணப்படுகிறார்கள் .
இதில் தமிழ் முஸ்லீம் மக்கள்; பெருமளவு பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
மலையகத்தோட்டத்தொழிலாளர்களின் நில உரிமை இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
• பெருவாரியான மக்களுக்கு இருப்பதற்கு நிலமும் வீடும் வேண்டும்.
• 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் வடக்கு கிழக்கில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இவை இழுபட்டுச்செல்லாமல் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய காரியங்கள்.
• மண்சரிவு அபாயங்களை குறைத்தல் அபாயகரமான இடங்களில் மக்கள் வாழ்வதான நிலையை தவிர்த்து பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தல்
• இலங்கைமுழுவதும் குப்பைகளை அகற்றுவதற்கான நவீனமுறைகள் இங்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
• நோய் நொடியில்லாமல் வாழும் உரிமை
• நச்சுக்கழிவுகளை அகற்றுதல் ,அழித்தல். மீள் சுழற்சிக்கு உட்படுத்துதல்
• நீர்முகாமைத்துவம் இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும்.
• சுகாதாரம், குடிநீர்- நன்னீர் சார்ந்த விடயங்களில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
• பாரிய வர்க்க ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் கல்வி சுகாதாரம் மருத்துவம் குறைந்த செலவில் கிட்ட வேண்டும்.
• ஆண்பெண் சமத்துவத்திற்கான பலமான அடித்தளம் இடப்பட வேண்டும்.வன்முறை சகல மட்டங்களிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
• மனித உரிமை ஜனநாயகம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
• பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
• இனமதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
• இலங்கை பல்லினங்களின் சமயங்களின் நாடு என்பது நிலை நாட்டப்பட வேண்டும்.
• உள்ளக சமூக நீதி சகல சமூகங்களிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
• அதிகார நிர்வாக யந்திரங்களின் செயற்பாடுகளுக்கு மனித உரிமை ஜனநாயகம் பற்றிய போதனைகள் பயிற்சி நெறிகள் நடத்தப்பட வேண்டும்.
• நாளும் பொழுதும் மரணம் காயம் என அவலச் செய்தியாக வீதி விபத்து. குறைப்பதற்கான விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள்
• எமது வீதிகளில் சைக்கிளில் செல்பவர்கள் பாதசாரிகள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கான பாதைகள் வீதிசுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
• அதிகாரம் நிர்வாகம் மக்களுடன் ஜனநாயக ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
• வாழ்க்கைச் செலவுச்சுட்டெண்ணுக்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கான நியாயமான வாழ்க்கைக்கான ஊதியமும் சமூக பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
• நிர்வாகயந்திரம் கெடுபிடி இல்லாததாக மக்களுக்கு நட்பானதாக மாற்றப்பட வேண்டும்.
• சுத்தமான குடி நீரை அனைத்துமக்களும் பெறுவதற்கான நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
• படித்து விட்டு வேலையற்று நிற்கும் ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இந்த அவலம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
• கல்வி முறையில் தீவிர சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
• தொழில் நுட்பம்- உயிரியல் தொழில்நுட்பம் உட்பட சுற்றாடல் தேவை சார்ந்ததாக மாற்றப்பட வேண்டும்.
• அறவிழுமியங்கள் சமூக நீதி பற்றிய போதனைகள் பாடவிதானங்களில் சேர்க்கப்பட வேண்டும்.
• விவசாயிகள் மீனவர்களுக்கு சந்தை பாதுகாப்பானதாக நீதியானதாக அமைய வேண்டும்.
• உற்பத்தி தொழில் சூழல் நம்பிக்கை நிறைந்ததாக மாற்றப்பட வேண்டும்.
• நில கடல் வழங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள்
• தொழில் துறைகள் விருத்தி செய்யப்பட வேண்டும்.
• தகவல்-வைபி தொழில் நுட்பம் பரவலாக குறைந்த செலவில் சாதாரண மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சுதந்திர பொலிஸ் பொதுச்சேவை நீதிச் சேவை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதன்பலாபலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைய வழிசெய்யப்பட வேண்டும்.
அவை மீண்டும் இன்னொரு விதமான அதிகாரக் கட்மைப்பாக மாறிவிடக் கூடாது.
• அடாவடித்தனம் ஊழல் அரசியல் சமூக அரங்கில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவாக உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
• இந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான நம்பிக்கையளிக்கும் வாழ்வு ஸ்தாபிக்கப்பட வேண்டும்
தமிழர் சமூக ஜனநாயக கட்சி(SDPT)