எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை

எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை ஏமாற்றும், அரசியல் தலைமைகளின் கூத்துகளின் தொடர்ச்சி ஆகும்.