எழுக தமிழ்: ‘வரலா(ற்)று’ தோல்வி

(என்.கே. அஷோக்பரன்)
“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.
சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்யப் பேரினவாதத் தேசியம் முயன்றது.