எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)


அ. வரதராஜா பெருமாள் —                

இலங்கையின் அரச சேவைகளில் உள்ளவர்களின் தொகை மற்றும் அதன் விளைவாக அரசு ஏற்றுள்ள செலவுச் சுமை தொடர்பான விடயங்கள் பற்றிய பொருளாதார ஆய்வில் அரசின் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அமைப்புக்களிலுள்ள ஆளணிகளின் நிலைமையை அவதானித்தோம். இந்தப் பகுதியில் அதன் தொடர்ச்சியாக இலங்கையின் கல்வி மற்றும் பொது நிர்வாக அமைப்பிலுள்ள நிலைமைகள் பற்றி நோக்கலாம்.