ஏங்கெல்ஸ் எனும் தியாக தீபம்

(அ.அன்வர் உசேன்)

உலகம் முழுதும் உள்ள பொதுவுடமைப் போராளிகளுக்கு வழிகாட்டும் ஆசான்களான மார்க்சின் பெயர் உச்சரிக்கப்படும் பொழுது ஏங்கெல்சின் பெயரும் இணைந்தே வருவது தவிர்க்க முடியாதது. அந்த அளவிற்கு இருவரும் சமூக மற்றும் அரசியல் தளங்களில் இணைந்து செயல்பட்டனர். அதனால்தான் லெனின் கூறினார்:‘‘புராதன இதிகாசங்கள் உன்னதமான நட்பைப் பற்றி பல உதாரணங்களைப் பேசுகின்றன. எந்த ஒரு இதிகாச மனித நட்பைவிட மிகச்சிறந்த நட்பை கொண்டிருந்த இரண்டு மகத்தான அறிஞர்கள் மற்றும் போராளிகளால்தான் தனது வர்க்கத்தின் அறிவியல் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன எனத் தொழிலாளி வர்க்கம் பெருமைப்படலாம்!’’