ஏப்ரல் கிளர்ச்சியின் 50 ஆண்டுகளின் பின்னர்: ஜே.வி.பியும் தமிழரும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்று, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி அமைதிகாக்கையில் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியின் பணிகளை, ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ஆற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜே.வி.பி உறுப்பினர்களது பாராளுமன்ற உரைகள் நன்கறியப்பட்டவை. கடந்த இரண்டு தசாப்த காலங்களில், பிரதான எதிர்க்கட்சிகள் செய்யத் தவறியவற்றை, ஜே.வி.பி பாராளுமன்றத்தில் செய்து வந்திருக்கிறது. குறிப்பாக, சீனிக் கொள்வனவு மோசடி, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளைத் ஜே.வி.பி தாக்கல் செய்திருக்கிறது.