ஐரோப்பிய பிரேரணையும் கைதிகளின் விடுதலையும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஐரோப்பிய நாடாளுமன்றம், ஜூன் 10 ஆம் திகதி, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணை, இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது போலும்! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகவும் எனவே, இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகைகளை நிறுத்த வேண்டும் எனவும், அந்தப் பிரேரணை மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்திருந்தது.